Monday, 12 December 2016

நாமும்−ஜோதிடமும்

ஜோதிடம் என்பது "சார்புடைமை" (relativity). அதாவது, அகத்திற்கும்/புறத்திற்கும் உள்ள தொடர்புதான் ஜோதிடம். இதில் நாம் என்பது தன்னிலை, 1ம் பாவம்; நமக்கு முன்னிலை என்பது 7ம் பாவம். அதாவது, 1 லிருந்து 7 வரை நம்மைச் சார்ந்த விசயங்கள், ஆனால் 7 லிருந்து 12 என்பது நாம் தொடர்புகொள்ளும் விசயங்கள். ஆக ஜோதிடத்தில் 12 பாவங்கள் என்பது அகத்திலும்−புறத்திலும் தொடர்புபட்டு, காலத்தால் #கர்மாக்களாய் பரிணமித்திருக்கிறது. அவை:−

1. #சஞ்சிதம்−1,5,9 (Past and fixed)
2. #பிரார்ப்தம்−2,4,7,10 (Present and practicing)
3. #ஆகாமியம்−3,6,8,11,12 (Future and applicable)

ஜோதிடமானது ஐம்புலனினூடே (கண், காது, முக்கு, வாய், சருமம்) நம்மைத் தொடர்புகொண்டு நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியமாய் இருக்கிறது. இங்கு கிரகங்களாகச் சொல்லப்படும் #ராகு/#கேது என்பவை "நேர்மின் மற்றும் எதிர்மின்" தன்மையுள்ள இருபடி−மூலங்கள். மேலும், #சூரியன்−#சந்திரன் என்பவை ஆத்மா−மனமாய், ராஜா−ராணியாய், சிவம்−சக்தியாய், இடகலை−பிங்கலையாய், புரோட்டான்−எலக்ட்ரானாய் உள்ளும்−புறமும் பிரதானமாக இருந்து, செயல்பட்டு, அதனுடன் கூடிய ஆதார சக்கரங்களாய் #குரு, #சனி, #செவ்வாய், #புதன், #சுக்கிரனும் இயங்குகின்றன. இவை அனைத்துமே அகத்திலும்−புறத்திலும் இருந்து நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியகங்களாகச் செயல்படுகின்றன.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், உடலில் சுவாசம் என்கிற உயிர்காற்று இருக்கும் வரை ஜோதிடம் என்கிற சார்புடைமை வேலை செய்யும்👍அதாவது, சுவாசம் இருந்தாலே அங்கு ஜோதிடம்தான் (நாடிகளில்−நவகிரகங்களின் நாட்டியம்)  பிரதானமாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்🙏

ஒருவன் இப்படித்தான் உதாரண புருஷனாய் இருக்க வேண்டும் என்பதற்கு அவனுடை 1,5,9 (லக்கினம்/பூர்வபுண்ணியம்/பாக்கியம்) பாவங்கள் வலுவாக இருக்க வேண்டும், இதற்கு உதாரணம் #ஶ்ரீராமர்; ஆனால் ஒருவன் எப்படி இருக்க கூடாதென்பதற்கு அவனுடைய 3,6,11 ஆகிய பாவங்களின் ஸ்திர தன்மையே காரணமாகும், இதற்கு உதாரணம் #ராவணன்.

இதைத்தான் "ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்" காமம்−குரோதம்−லோபம் (3,6,11) இருப்பவன் தன்னிலை (சத்தியத்தை)  மறந்து, அழிவை சந்திப்பான் எனக்கூறியுள்ளார்🙏

தீபாவளி (காரண/காரியம்):

#புறத்தில்:

துலாம் மாதமான ஐப்பசியில்  #சூரியன்−#சந்திரன்−#புவி−#அகஸ்திய_நட்சத்திரம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் ஏற்படும் ஒருவிதமான இயற்கை சக்தியைக் கருத்தில் கொண்டே அதற்கு முந்திய தினமான #சதுர்த்தசியின் அதிகாலையில் வென்னீரில் குளித்துவிட்டு, விளக்கேற்றி
விளக்கின் ஒளியில் #மகாலக்ஷ்மியை
வணங்குதலே #தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதாவது, ஐப்பசி மாதத்தில் #சூரியன் புவியைவிட்டு 180 பாகைகள் விலகி நிற்பதால், புவியில் குறைந்த அளவே சூரியக் கதிர்கள் விழும், எனவே #அம்மாவாசையன்று நிகழும் குறைவான வெப்பச்சலனத்தை ஈடுசெய்ய புவியெங்கும் #தீபஒளி ஏற்றப்படுகிறது.

#அகத்தில்:

#நரன்-மனிதன்
#அசுரன்−ரஜோ, தமோ அசுர குணங்கள்

ஆக மனிதனானவன் ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு #சத் (சாத்விக) குண வயப்படுதல்தான் அது #நரகாசுரவதம் என சாமான்யர்களுக்கு கதையாக சொல்லப்பட்டது. அதாவது நம்மில் இருக்கும் #அகங்காரத்தை "தீயிலிட்டு" பொசுக்குவதே தீபாவளிப் பண்டிகையின் உண்மைக் காரணமாகும்.

இவ்வாறாக நண்பர்கள் அனைவரும் தங்களுடைய *ரஜோ, தமோ குணங்களை தீயிலிட்டு* "சாத்வீக" குணத்தைப்பெற வேண்டி  இத்தீபாவளித் திருநாளில் வாழ்த்துகிறேன்🙏

நவக்கிரகங்களின்_பார்வை (3,4,5,7,8,9,10):

எந்த ஒரு கிரகத்துக்கும் தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட பார்வை என்பது கிடையாது. கிரக பார்வை என்பதன் தீர்மானமே #நம்மைச்சார்ந்த (ஸ்தூலம்) விசயம்தான், தவிர வானத்திலிருக்கும் கிரகத்துக்கு கிடையாது. உதாரணமாக, ஒட்டுமொத்த கிரகங்களின் ஒளி/மின்காந்த அலைக்கற்றைகள் (Light Electro Magnetic Radiation) சூரியனால் பிரதிபலிக்கப்பட்டு #ஃபோட்டான்களாய் (Photons) #சப்தஸ்வரங்களால் (Spectrum) கடத்தப்பட்டு சலனமாய் வளியெங்கும் பரவுகிறது.

அதாவது, வளிமண்டலமெங்கும் அக்கிரகங்களின் #ஒளியும்−#ஒலியுமான (இருப்பு/இயக்கம்) ஃபோட்டோன்களாய் சப்தஸ்வரங்களால் பரவியிருக்கிறது. அவை நம்மில் #ஐம்புலன்களினூடே (கண், காது, மூக்கு, வாய், மெய்/சருமம்) ஊடுறுவி நம் உடலில் ஏற்கனவே அமைக்கப்படுள்ள கிரக கட்டமைப்புக்கு ஏற்றார் போல உட்கிரகிக்கப்படுகிறது, அதில் #சுவாசமே பிரதானமாய் இருக்கிறது. மேலும், கிரக செயல்பாடுகள் அனைத்துமே #ஸ்தூலம் சார்ந்த விசயங்கள், அவை ஸ்தூலத்திற்கு மட்டுமே விசயம்.

இங்குதான் விசயமே இருக்கிறது. அதாவது, ஒரு #மனிதன் ஜனித்தபோது (முதல் சுவாசும் எடுத்த போது) #புறத்தில் என்ன கிரக அமைப்பு இருந்தனவோ அதுவே அம்மனிதனின் #அகத்தின் (ஸ்தூலம்) கிரக−கட்டுமானமாகும் (Base construction). எனவே அக்கிரக்கட்டுமானத்தின் அடிப்படையில்தான் ஒளி/மின்காந்த அலைகளின் #உட்கிரகித்தலும் (Absorption) இருக்கும், இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும்.

ஆனால் கிரகபார்வை என்று தீர்மானிக்கப்பட்டது என்னவெனில், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினையுண்டு (Opposite reaction) என்கிற தத்துவத்தின் அடைப்பையில் அனைத்துக் கிரகங்களுக்கும் 7ம் பார்வை உண்டு என்பது தெளிவாகிறது. அதாவது 7ம் பாவத்திற்கான அனைத்து கிரகங்களின் ஃபோட்டான்கள் உட்கிரகிப்பு நம் உடலில் பிரதானமாக இருக்கும். அதுபோல #சனி, #செவ்வாய் மற்றும் #குருவின் 3,4,5/8,9,10 ஆகிய பார்வைகளின் தீர்மானங்கள் அக்கிரகங்களின் காரகத்துவம் மற்றும் பாவங்களின் (காலபுருஷனின் வீடுகளான விருச்சிகம்/தனுசு/மகரம்) அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டிருக்கவேண்டும். அதாவது அதன் அடிப்படையிலே ஃபோட்டான்களின் உட்கிரகித்தல் உடலுக்கு பிரதானமாகக் கிடைக்கும் என்பதையே குறிப்பிட்ட பார்வையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் உணர்ந்த காலம் (தன்னிலையும்/முன்னிலையும்)

உயிர்−#தன்னிலை
உலகம்−#முன்னிலை
இறை−#படர்க்கை

நான் என்கிற தன்னிலை #இருப்பாகவும், அது சிருஷ்டியாகப் பரந்து, விரிந்து உலகமாகிய #இயக்கமாகவும் இருப்பதாலேயே படர்க்கையாகிய "இறைவன்" என்பது நமக்கு எட்டாக்கனியாய் இருக்கிறது. காரணம், இறையை உணர்வதென்பது காலத்தின் தீர்மானத்தில்தான் இருக்கிறது. உதாரணமாக:−

//கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே #மிருகம், உள்ளே #கடவுள்,
விளங்க முடியாக் கவிதை நான்,

மிருகம் கொன்று, மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று, உணவாய் தின்று,
மிருகம் மட்டும், வளர்கிறதே...!!!

நந்தகுமரா, நந்தகுமாரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற, எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கிலிருந்து, மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில், பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?//

#அத்வைதத்தின் உச்சம், இப்பாடலின் பொருள்...!!!! 2003 களில் வெளிவந்த இப்பாடலை பலநூறு முறைகள் கேட்டிருப்பினும், அஃது ஓர் #அனுமானமாய் விளங்கினாலும், 12 வருடங்கள் கழித்தே அதன் உண்மை சாரம் (சுத்தாத்வைதம்) #அனுபவமாகப் புரிந்தது. இதுவே "காலத்தின் தீர்மாமனமுமாய் இருக்கிறது" என்பதையும் உணரமுடிகிறது. ஆக, காலத்திலிருந்து கொண்டு காலத்தை தீர்மானிக்க நாம் யார்..? அதாவது, அது அப்படித்தான் நடக்கவேண்டும், இது இப்படித்தான் இருக்கவேண்டும், என்கிற தீர்மானம் நம் கையில் இல்லை என்பதுமே தெளிவாக விளங்குகிறது...!!!

உதாரணமாக, ஒரு வித்தின் தன்மை #இருப்பாய் (தன்னிலை) விதையினுள் இருப்பினும், அது #காலத்தால் பரிணமித்து #சிருஷ்டியாய் விரியும் போதுதான் அதன் குணபேத மாற்றங்கள் (செடி/மரம்/பூ/கனி/விதை) உலகமாய்/முன்னிலையாய் வெளிப்படுகிறது, தவிர கட்டாயத்தால் நாம் அதை தீர்மானித்து வெளிக்கொணர முடிவதில்லை, என்பதுவே #அறிவாகவும், அவ்வித்தின் இருப்பை காலதீதனமாக உணர்வது என்பது #ஞானமாகவும் விளங்குகிறது.

முதல் 12−#அறியாமை
2வது 12−#அனுமானம்
3வது 12−#அனுபவம்
4வது 12− #அறிவு
5வது 12−#ஞானம்

கர்மாவும்_பரிகாரமும்

கர்மா என்பது  நமக்கு விசயமாகும்போது அது #காலத்தால் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அதாவது, காலத்திற்கு அப்பார்ப்பட்ட கர்மச்செயல்பாடுகள் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. மேலும் காலத்துடன் #இடமும், #பொருளும் ஒன்றுசேர அங்கு பலனாய் #நிமித்தமும் வந்துவிடுகிறது. அதாவது இடத்திற்கும், பொருளுக்கும் தகுந்தவாறே காலத்துடன்கூடிய நிமித்தமும் விழைகிறது.

காலமாகிய கர்மாவின் பரிமாணங்கள்:−

1. #சஞ்சீதம் (முன்பிறவி/இறந்தகாலம்)
2. #பிரார்ப்தம் (காமிய−நிஷ்காமிய/நிகழ்வு)
3. #ஆகாமியம் (எதிர்காலம்/அடுத்தபிறவி)

அதுபோல #பரிகாரம் என்பது #தோஷத்தை குறைத்தோ அல்லது #யோகத்தை கூட்டியோ அல்லது மாற்றியோ செய்யப்படும் #ஆகாமியக் கர்மாவாகும். அதாவது, சொல்லப்படும் பரிகாரம் என்பது எதிர்காலமாகிய  #ஆகாமிய கர்மாவில் அடங்கும். இதுவே அடுத்த பிறவிக்கு #சஞ்சீத கர்மாவாகக் கொண்டு செல்லப்படும். மேலும், எந்தப் பரிகாரம் எங்கு, எப்படிச் செய்யவேண்டும், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதெல்லாம் அதை சரியாக கணித்துக்கூறுவரிடத்தில் உள்ளது என்பதுவே மக்களின் புரிதலாக இருக்கவேண்டும்.

உதாரணம், ஒருவருக்கு உடலில் #விட்டமின் A குறைவு எனில், #விட்டமின் B மாத்திரையை சாப்பிட்டால் உடலுக்கு #விட்டமின் A கிடைத்துவிடாது, அது சரியான பரிகாரமும் ஆகாது. எனவே பரிகாரம் என்பது எதைச் சார்ந்தது என்பதன் அடிப்படைப் புரிதலும் மக்களுக்கு மிக அவசியமாகிறது.

அதாவது பரிகாரம் பற்றி பலருக்கும் மாற்றுக்கருத்து உண்டு, அது என்னவெனில், விதிக்கப்பட்ட கட்டமைப்பை  பரிகாரத்தால் மாற்றியமைக்கவே இயலாது என்பதேயாகும். ஆம், அது உண்மையே ஆனால் பரிகாரத்தால் மாற்றியக்கக்கூடிய கர்ம செயல்பாடுகளும் நம்மில் உண்டு. அதன் தெளிவை கீழே காணலாம்.

1. சஞ்சீதம்−#ஜாதகம் (கர்மவினையால் விதிக்கப்பட்ட ஜனனகால கிரக அமைப்பு, இதை மாற்ற இயலாது

2. பிரார்ப்தமாகிய காமிய/நிஷ்காமியம்−#கோள்சாரம் (அதாவது விதிக்கப்பட்டதன் செயல்பாடு)

3. ஆகாமியம்−#தசா/#புக்தி/#அந்தரம் (இதுவே பரிகாரத்தை செயல்படுத்தப் பயன்படும் எதிர்காலக் கர்மவினையாகும்).