(திருச்சிற்றம்பலம்)
"நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க, கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க, ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க−5"
"ஈசனடிபோற்றி
எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி−15" −#திருவாசகம்
"வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே"
−#கோளறு_திருப்பதிகம்.
#முன்னுரை:−
முதன்முயற்சியாக நான் உணர்ந்த இப்பிரபஞ்ச விசயங்களையும், நான்பெற்ற இன்பங்களையும் நண்பர்களாகிய உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். இப்புவியின் "ஆதார சக்திமையங்களாக" விளங்கும் #ஸ்தலங்களும், அவற்றின் #விருட்சங்களின் சக்திகளையும் நான் உணர்ந்த விசயங்களாய், அனுபவமாய், பரிகாரமாய் நண்பர்களுக்கு எடுத்துரைப்பதை என் பிரார்ப்தமாகக் கொண்டு ஏக இறைவனின் திருநாமத்தோடு ஆரம்பிக்கிறேன்.
#சிவ_ஸ்தலங்களும்−விருட்ச சாஸ்திரமும்:
"கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி அவ்வாறாக, இயற்கையின் கிரக சக்தியோட்டங்கள் பரவலாக மக்களுக்கு கிடைக்கும் வண்ணம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல ஆகம விதிகளின் (யாக−வேத மந்திரங்கள் மற்றும் யோக−முத்திரை பூஜைகள்) அடிப்படையில் கோவில்கள் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்காலத்திலும் பலவிதமான கோவில்கள் எழுப்பப்பட்டாலும், சிவன் கோவில்கள் அமைக்கப்படுவது என்பது மிகஅரிதாய் இருக்கிறது. காரணம் பண்டையகால சிவன் கோவில்கள் ரிஷிகளாலும், சித்தர்களாலும், முனிவர்களாலும், ஞானிகளாலும், மிகப்பெரிய அரச பரம்பரை வழிவந்தவர்களால் மட்டுமே தீர்மாணித்து அமைக்கப்பட்டு வந்தது, மேலும் #பஞ்பூதசக்திகளைக் கண்டறிந்து, அவற்றை ஒரிடத்தில் நிலைநிறுத்துவதற்கு இயற்கையின் தன்மைகளை துள்ளியமாக அறியவேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே இயற்கையின் தன்மைகளை அறிந்த வேத வித்தகர்களாலும், ஞானிகளாலும் இப்புவியெங்கும் பஞ்சபூதக் கோவில்கள் கொண்டு எழுப்பப்பட்டது, அல்லாமல் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரியாக ஏதாவது ஒரு இடத்தில் சிவன்கோவில் அமைப்பது என்பது இயலாத காரியமாகும்.
அப்படியாக கோவில்கள் அமைப்பதில் விருட்ச சாஸ்திரம் பெரிதும் துணைபுரிகிறது. பொதுவாக ஸ்தல விருட்சங்களில் அரசு, வில்வம் மற்றும் நாகலிங்க விருட்சங்கள் அதீத தெய்வீகத் தன்மையுடையது என்றும் அவை தேவலோக மரங்கள் என்றும் நாம் கேள்விப்பட்துண்டு, இதில் சிறப்பம்சம் என்னவெனில் இம்மூன்று விருட்ஷங்களும் தெய்வீகத்தன்மைகள் இருக்குமிடத்தில் மட்டுமே வளருமே, தவிர எல்லா இடங்களிலும் வளருவதில்லை. குறிப்பாக வில்வம் மற்றும் நாகலிங்க விருட்சங்கள் "பஞ்சபூதத் தத்துவங்கள் மற்றும் தன்மைகள்" விரவிக்கிடக்கும் இடங்களில் மட்டுமே வளரக்கூடியவை. ஆக அப்பஞ்ச பூதத்தன்மைகள் இருக்கும் இடங்களை அறிய இவ்விருட்சங்களைப் பயிரிட்டு, வளர்ந்ததும் கோவில் அமைத்தும் அல்லது சுயம்பாக வளர்ந்த விருட்சங்களின் அருகில் அதற்குண்டான கிரக சக்தியை தீர்மாணித்து கோவிலமைத்தனர்.
பஞ்சபூதத்தின் அம்சமாகிய சிவபெருமான் #ருத்ர, #அர்த்தநாரி, #காலபைரவ, #நடராஜ மற்றும் #சதாசிவ தன்மைகளாக எங்கும் வியாபித்திருக்கிறார். ஆக ஒவ்வொரு சிவ ஸ்தலங்களிலும் இவ்வைந்து தன்மைகளில் ஏதாவது ஒரு தன்மை கற்பகிரகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. இதே போன்று மற்றபிற ஸ்தலங்களிலும் அக்கிரகதன்மையுள்ள சக்திகள் ஈர்க்கப்பட்டு, கற்பகிரகத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. அப்படியான சக்திகளை நிலைநிறுத்த #கோபுர #கலசங்களும், #தெப்பங்களும், #ஸ்தலவிருட்சமும் (Aerial view point) ஆதார சக்தி மையங்களாக இருந்து குறிப்பிட்ட கதிர் வீச்சை பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து கற்பகிரகத்திற்கு அளிக்கிறது. எனவே பெரும்பாலான சிவன்கோவில்கள் புராதண காலங்களில் ஆகம விதிகள் கொண்டு கட்டப்பட்டு இன்றுவரை பராமரிக்ககப்பட்டு வருகிறது, அந்த வரிசையில் பழம்பெரும் சிவன்கோவிலாகிய #ஶ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றிதான் நான் விளக்கமாகக்கூற உள்ளேன்.
#ஶ்ரீவேதபுரீஸ்வரர்_மற்றும்_வேதநாயகி_அம்மன்_திருத்தலம் (இடம்: ஆலந்தூர், சென்னை):
#ஸ்தல_அமைப்பும்_வரலாறும்:
இத்தலத்தின் இருப்பு மற்றும் சக்தியோட்டத்தை முதன்முதலில் கண்டறிந்து தீர்மானித்தவர் #பிருங்கி #மகரிஷி என்றும், பிறகு இத்தலம் கி.பி 12ம் நூற்றாண்டு பல்லவ கால மன்னர்களால் உருவாக்கபட்ட, மஹா சக்திமிக்க சிவ ஸ்தலமாகும். இக்கோவிலில் வேதபுரீஸ்வரர் மூலவராய் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு, மூலவருக்கு முன்புறத்தில் இட−வலமாய் முருகரும், விநாயகரும், மூலவரின் இடப்பக்கம் அதாவது, வடக்குப் பக்கத்தில் உடனுறை வேதநாயகி அம்மன் தெற்குமுகமாய் நிறுவபட்டும், ஈசானத்தில் நவக்கிரகங்களும், ஆலய முன்வாசலின் வலப்பக்கம் அதாவது, தெற்கு முகமாய் விநாயகரும், அதனைத் தொடர்ந்து மேற்கு முகமாய் சனீஸ்வரரும், மூலவரின் வெளிப்புறத்தில் அதாவது, தெற்குப் பகுதியில் கிழக்குமுகமாய் விஷ்ணுவும், அவருக்கு எதிரில் மேற்கு முகமாய் ஆஞ்சநேயரும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி சிவதுர்க்கையும், தட்சிணாமூர்த்தியும் மூலவரின் வெளிப்புறத்தில் இட, வலமாய் நிறுவப்பட்டுள்ளார்கள்.
#ஸ்தலத்தின்_சிறப்பு:
மூலவராகிய வேதபுரீஸ்வரர் #விசித்திர_லிங்கமும், மூலவரின் பின்பகுதியில் அதாவது, வட−மேற்கில் நிறுவப்பட்டிருக்கும் 1000 வருடங்கள் தாண்டிய பழமைமிக்க #நாகலிங்க_விருட்சமும்தான் இத்தலத்தின் மிக சக்திவாய்ந்த மற்றும் பிரபஞ்ச சக்தியின் கதிர்வீ்ச்சை தன்பால் ஈர்க்கும் ஆதார சக்திமையங்களாக விளங்குகின்றன.
லிங்கமானது விண்ணிலிருந்து பூமிக்குள் வந்த விண்கல்லால் உருவாக்கப்பட்டது எனவும், அது சந்திரகாந்தக் கல்லின் தன்மையை ஒத்திருக்கிறது என்றும் மிக ரகசியமாக கோவில் நிர்வாகக்குழுவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிரிய வண்ணத்திலிருக்கும் லிங்கமானது #மாசிமாததத்தில் மட்டும் சூரியனின் கதிர்கள் லிங்கத்தில் படுகிறது, அவ்வாறு சூரியனின் கதிர்களானது லிங்கத்தில் படும்பட்சத்தில் அது மிளிரிய பொன்னிறமாக பிரகாசிக்கிறது. அப்படியாக சூரியக்கதிர்கள் லிங்கத்தில் படும் நாட்களில் சூரியபகவானே லிங்கத்தைப் பூஜிப்பதாக எண்ணி அன்றைய காலை நேரத்தில் மட்டும் மூலவர் இருக்கும் அறைக்குள் யாரும் செல்வது கிடையாது. ஆனால் இதற்கு அறிவிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. அது என்னவெனில் விண்கல்லால் ஆன லிங்கத்தில், சூரியனின் கதிர்கள் படும்போது அங்கு அதிகப்படியான கதிர்வீச்சு வெளிப்படுதேயாகும். இவையெல்லாம் தீ்மானிக்கப்பட்ட சக்தியின் வீரியத்தை நிலைநிறுத்திப் புதுப்பிப்பதாகவும் இருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம். எனவே இத்தலத்தில் மாசிமாதத்தில் சிறப்பு பூஜைகளும், மாசிமாதத்தில் வரும் மஹா சிவராத்திரியும் மிகச்சிறப்பான சாங்கியங்களாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
#பக்திமார்க்கமும்_ஞானமார்க்கமும்
நமக்கு வேளியே அதாவது, பிரபஞ்சத்தில் இறைவனைத்தேடுவது #பக்திமார்க்மென்றும், நம்மில் இருக்கும் இறைவனை உணர்வது என்பது #ஞானமார்க்கமேன்றும் நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறாக கோவில்கள் அனைத்தும் பக்திமார்க்கத்தின் அடிப்படையிலே, பாமரரும் பயன்பெறும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது, தவிர ஞானமார்க்த்திற்கு கடுந்தவமும், தியானமுமாகிய மனஒருநிலைப்பாடு அவசியமாய் இருக்கிறது, இப்படியான ஞானமார்க்கம் அனைவரும் கிடைக்கப்பெறுவதென்பது இறையின் அருளும், அவரவர் கர்மாவும் தீர்மானிக்கின்றன.
#நான்_உணர்ந்த_காலபைரவா:
குருநாளாகிய வியாழக்கிழமைன்று, வளர்பிறை−#அஷ்டமி திதி மற்றும் #புனர்பூசம் நட்சத்திரத்தில், இத்தலத்தின் நாகலிங்க விருட்சத்தின்கீழ் அமர்ந்து, ஓர் அமைதியான தியானத்திலிருக்கும் போது காலபைரவத் தன்மை உணரப்பட்டது. முதலில் ஓடிய சூரியகலை சுழிமுனையாகி, பிறகு அதுவே ஊசி போன்ற ஒரு மெல்லிய சுவாசமாகி, பிறகு சில நொடிகள் அச்சுவாசமும் நின்று, சுவாசமில்லா மனம் ஒடுங்கிய நிலையாகிய #காலபைரவ தன்மைக்குள் கொண்டுசென்றது. இதற்கு வலு சேர்க்கும் வண்ணம், என்னுடைய ஜனன லக்கினத்தில் குரு திக்பலத்துடன் இருப்பதும் ஓர் உந்து சக்தியாக அமைந்தது எனலாம். அப்படியான சுவாசமில்லாக் காலபைரவத் தன்மையில் உடல் இலேசாகி, குளிர்ந்து, அது ஒரு விதமான கிளர்ச்சிநிலை எனவும் கொள்ளலாம். ஆக இங்கு முழுக்க முழுக்க காலபைரவத் தன்மை சூட்சுமமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை மிகத் தெளிவாக என்னால் உணரமுடிந்தது.
#சனி_மற்றும்_ராகு #பரிகாரம்:
பொதுவாக நாளும் (திதி) கோளும் (நவக்கிரகங்கள்) சாதாரண மனிதனின் அன்றாட செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாகின்றன. [அவ்வாறான கிரக செயல்பாடுகளின் தன்மைகள் நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரணமாக இருப்பதை அறிய Astro Babu ஐயா அவர்களின் "கிரக காரத்துவம்" கட்டுரைகளைப் படிக்கப் புரிந்து கொள்ளலாம்]. அதில் அதிகப்படியாக சனி கிரகத்தின் தாக்கத்தை ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக அனுபவித்தே ஆகவேண்டும் என்றும், ராகுவின் தீவிரத்தை முற்றிலுமாக குறைக்க எந்த ஒரு சிறந்த பரிகாரமுறைகளும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இக்கிரக செயல்பாடுகளின் தாக்கத்தைக் ஓரளவிற்கு குறைக்க அல்லது சமநிலைப்படுத்த அக்கிரக சக்திகள் தீர்மாணிக்கப்பட்ட ஸ்தலங்களுக்குச் செல்வது, பரிகார முறைகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆனால் நவக்கிரகங்கள் அனைத்தும் பஞ்சபூதத் தன்மையான "நமசிவாயத்திற்கு" கட்டுப்பட்டவை என்பதை #கோளறு_திருப்பதிகத்தில் #திருஞானசம்பந்தர் மிகத்தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆக நமசிவாயத்தில் நடுநிலை நாயகராய் திகழ்வபர் #காலபைரவர், அதாவது:
#ந−ருத்ரர்
#ம−அர்த்தநாரீஸர்
#சி−காலபைரவர்
#வ−நடராஜர்
#ய−சதாசிவப்பெருமான்
எனவே, நடுநிலையான காலமில்லாத் தன்மையை நாம் ஒரு ஷணம் (ஒரு நொடியில் 1000 பங்கு) உணர்ந்தாலும் அங்கு நாளும், கோளும் வேலை செய்யாது, அவ்வாறு உணரப்படும் சில ஷணங்கள், நம் உடலின் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த கிரக தன்மைகளையும் மாற்றியமைக்கும் அல்லது சமநிலைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
எனவே ராகுவின் தீவிரத்தைக் குறைக்கவும், சனியின் தசா, புக்தி, அந்தரம், ஏழரைச்சனி ஜன்மசனி மற்றும் பாதசனி, அர்த்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி மற்றும் ஜனன லக்கின விரையசனி என சனிபகவானின் தாக்கத்தால் ஏற்படும் அனைத்து விதமான தடைகளுக்கும், மனக்குழப்பங்களுக்கும், தொடர்ந்த பயமும், தீராத நோயையும் போக்க பரிகாரமாய் குருநாளில், குரு நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் இத்தலத்திற்குச் சென்று நிர்ணயிக்கப்பட்ட காலபைரவத் தன்மையை நம்முள் கிரகித்துக்கொள்ள அவை அனைத்தும் சீர்படுத்தப்பட்டு நமக்கு நல்லதொரு தன்மையையும், மனநிலையும் கிடைக்கப்பெறும் என்பதை என்னால் உறுதியாகக்கூற இயலும். மேலும் #திருநல்லாறு, #திருநாகேஷ்வரம் மற்றும் #காளஹஸ்தி அல்லது மற்றபிற சனி மற்றும் ராகு ஸ்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் இத்திருத்தலத்திற்குச் சென்று காலபைரவத் தன்மையை அடைந்து நலம்பெற நண்பர்கள் அனைவருக்கும் எம்பெருமானின் அருளாசியுடன் பரிந்துரைக்கின்றேன்.
#மேலும்_சில_பரிகாரங்கள்:
சனி மற்றும் ராகுவிற்கான காலபைரவத் தன்மை மட்டுமில்லாது ஏனைய கிரகங்களின் (உதாரணமாக: சுக்கிரன்−பெருமாள், சந்திரன்−சக்தி, செவ்வாய்−முருகன், கேது−விநாயகர்) சக்திகளைப்பெற (அ) சமனிலைப்படுத்த அவரவர்களின் கிரக ஆதிபத்தியத்திற்கு ஏற்றார்போல், சரியான நாள், நட்சத்திரதை தேர்வு செய்து இத்திருத்தலத்திற்குச் சென்று #வழிபட அல்லது #தியானம் செய்ய, அதற்குண்டான சக்தி கதிர்வீச்சை ஸ்தலவிருட்சம் பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து நமக்கு அளிக்கும் என்பதும் என்னுடைய அனுமானமாகும். ஆக இத்தலத்தின் அதிமுக்கிய மற்றும் நடுநிலைச் சக்திமையமாக வீற்றிருப்பது நாகலிங்க விருட்சமும், அதற்கடுத்ததாய் சிவலிங்கமும்தான்.
#குறிப்பு: லிங்க வழிபாடோ அல்லது விருட்ச தியானமோ அல்லது இரண்டும் கலந்தோ குறைந்தது 2 முதல் 3 மணி நேரங்கள் இருப்பது மிக அவசியம். மேலும் இது அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும்.
#முடிவுரை:
இத்திருத்தின் கிழமேற்குப் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் வேம்புலி அம்மன் ஆலயம மற்றும் ஆலாட்சி அம்மன் ஆலயம், கிழக்குப் பகுதியில் 200 மீட்டர் தொலைவில் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் 100 மீட்டர் தொலைவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், தெற்குப்பகுதியில் 100 மீட்டர் தொலைவில் திரௌபதி அம்மன் ஆலயம், தென்கிழக்குப் பகுதியில் 125 மீட்டர் தொலைவில் தேவி ஶ்ரீகடும்பாடி அம்மன் ஆலயம் மற்றும் 150 மீட்டர் தொலைவில் ஶ்ரீ பெரியபாளையத்து அம்மன் ஆலயங்களும் புடைசூழ இருக்கின்றன. அதுமட்டுமில்லாது கிழக்குப்பகுதியில் 50 மீட்டர் தொலைவில் 500 ஆண்டுகள் பழமையான, அருள்மிகு மஹான் #ஶ்ரீதாடிக்காரசுவாமி ஜீவ சமாதியும், 200 மீட்டர் தொலைவில் 150 ஆண்டுகள் பழமையான, மஹான் #ஶ்ரீசாங்குசித்த #சிவலிங்கநாயனார் ஜீவ சமாதியும் வீற்றிருக்கின்றன.
எனவே இப்பகுதியில் ஶ்ரீ வேதபுரீஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மன் நடுநிலை நாயகர்களாய், மாபெரும் இருப்பாகவும்−சக்தியோட்டமாகவும் இருந்து மக்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர். இதை நண்பர்கள் அனைவரும் பயனுள்ளதாக்கிக் கொண்டு, ஏனைய நண்பர்களுக்கும் தர்மத்தின் வழியில் கொண்டுசெல்ல வேண்டுகிறேன். மேலும் மற்றபிற ஆலயங்களின் இருப்பு மற்றும் இயக்கசக்தியின் தன்மைகளையும் உணர்ந்து, திருவருளுடனும்−குருஅருளுடனும் அடுத்தடுத்த பதிவுகளாய் பரிகாரங்களுடன் பதியப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி...!!!

No comments:
Post a Comment