#அருள்மிகு_சுயம்புநாத_சுவாமி_திருக்கோயில்
பேரளம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடிக்கு தெற்கே 3 கி.மீ. இக்கோயில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் #சுயம்புலிங்கமாக (அடி காணா ஆழம்) அருள்பாலிக்கிறார். அம்மன் #பவானியம்மன். அக்கினி தீர்த்தம் ஆலயத்திற்குக் கீழ் உள்ளது, தவிர #சனி, #ராகு மற்றும் #சந்திரன் இங்கு தனித்தனியாக உள்ளனர்.
தவத்தில் வல்லவரான #கார்ஷனாஜினி_மகரிஷி இத்தலத்தில் சுயம்புநாதரை நோக்கி பலஆண்டுகாலம் தவம்செய்து இப்புவியுல் உள்ள அனைத்து சிவஸ்தலங்களையும் ஒருங்கே காட்சியாக கண்ட ஸ்தலமாகும். மேலும் #கலிதோஷத்தால் ஆன்மாக்களுக்கு ஏற்படும் துன்பங்களை இத்தல இறைவனை தரிசித்தவுடன் நீங்கவும், தன் பெயரால் இத்தலம் விளங்கவும் வரம் பெற்ற ஸ்தலமாகும்.
#ஸ்தல_சிறப்பு
இத்தலப் பெருமானாகிய சுயம்புநாதர் தன்னைப் பூசித்த #இந்திரனுக்குப் பெறுதற்கரிய பேற்றினைக் கொடுத்தார். #சூரியனுக்கு மிகுந்த ஒளியினை அளித்தார். யாக்ஞவல்கியர் பூசித்துப் பிரமஞானத்தைப் பெற்றார். #சுக்கிராசாரியர் வழிபட்டு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றலைப் பெற்றார். #மார்கண்டேயர் வழிபட்டு நித்தியத்துவத்தையடைந்தார். #விசுவாமித்திரர் வழிபட்டு அதனால் க்ஷத்திரிய உடலைவிட்டு பிராமண்யத்தை அடைந்தார் என இத்தலபுராண வரலாறுகளாகும்.
#நானுணர்ந்த_சூன்யா:
இவ்வாறாக இக்கோவிலுக்கு புராண கதாப்பாத்திரங்கள் பலவாறு கூறப்பட்டாலும், நான் இன்று எதேச்சையாக இத்தலத்திற்குச் சென்று அறிந்த, உணர்ந்த விசயங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதே என் பிரார்ப்தமாக கருதுகிறேன். அதாவது பேரள முனிவர் இங்கு கடுந்தவம் செய்து இறைவனின் திருவுருவக் காட்சியைக் கண்டதால் #தியானம்_செய்பவர்களும்; நவக்கிரகங்களில் சுக்கிரன் இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தையை இங்கு இறைவனிடம் பெற்றதால் இங்கு #ஜோதிடர்களுமே அதிகமாக வருவதாக அங்கிருப்பவர் ஒருவர் மூலம் அறிந்தேன். மேலும் அமைதியான தியானத்தில் அமரும்போது, இங்கு இருக்கும் தன்மையை அறிவால் பகிரமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம். அதாவது, இத்தலம் சூன்யத்தின் கருவூலத்தை உணர, தியானம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இங்கு மனமானது ஒடுங்கி, இயல்பாகவே தியானநிலையை அடைவதுடன், சில வினாடிகள் #சூன்யாவாகவே மாற முடிந்தது எம் பாக்கியம், பராபரமே...!!!
#திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment