Monday, 12 December 2016

நான் உணர்ந்த காலம் (தன்னிலையும்/முன்னிலையும்)

உயிர்−#தன்னிலை
உலகம்−#முன்னிலை
இறை−#படர்க்கை

நான் என்கிற தன்னிலை #இருப்பாகவும், அது சிருஷ்டியாகப் பரந்து, விரிந்து உலகமாகிய #இயக்கமாகவும் இருப்பதாலேயே படர்க்கையாகிய "இறைவன்" என்பது நமக்கு எட்டாக்கனியாய் இருக்கிறது. காரணம், இறையை உணர்வதென்பது காலத்தின் தீர்மானத்தில்தான் இருக்கிறது. உதாரணமாக:−

//கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,

வெளியே #மிருகம், உள்ளே #கடவுள்,
விளங்க முடியாக் கவிதை நான்,

மிருகம் கொன்று, மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்,

ஆனால்…
கடவுள் கொன்று, உணவாய் தின்று,
மிருகம் மட்டும், வளர்கிறதே...!!!

நந்தகுமரா, நந்தகுமாரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற, எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?

குரங்கிலிருந்து, மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில், பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?//

#அத்வைதத்தின் உச்சம், இப்பாடலின் பொருள்...!!!! 2003 களில் வெளிவந்த இப்பாடலை பலநூறு முறைகள் கேட்டிருப்பினும், அஃது ஓர் #அனுமானமாய் விளங்கினாலும், 12 வருடங்கள் கழித்தே அதன் உண்மை சாரம் (சுத்தாத்வைதம்) #அனுபவமாகப் புரிந்தது. இதுவே "காலத்தின் தீர்மாமனமுமாய் இருக்கிறது" என்பதையும் உணரமுடிகிறது. ஆக, காலத்திலிருந்து கொண்டு காலத்தை தீர்மானிக்க நாம் யார்..? அதாவது, அது அப்படித்தான் நடக்கவேண்டும், இது இப்படித்தான் இருக்கவேண்டும், என்கிற தீர்மானம் நம் கையில் இல்லை என்பதுமே தெளிவாக விளங்குகிறது...!!!

உதாரணமாக, ஒரு வித்தின் தன்மை #இருப்பாய் (தன்னிலை) விதையினுள் இருப்பினும், அது #காலத்தால் பரிணமித்து #சிருஷ்டியாய் விரியும் போதுதான் அதன் குணபேத மாற்றங்கள் (செடி/மரம்/பூ/கனி/விதை) உலகமாய்/முன்னிலையாய் வெளிப்படுகிறது, தவிர கட்டாயத்தால் நாம் அதை தீர்மானித்து வெளிக்கொணர முடிவதில்லை, என்பதுவே #அறிவாகவும், அவ்வித்தின் இருப்பை காலதீதனமாக உணர்வது என்பது #ஞானமாகவும் விளங்குகிறது.

முதல் 12−#அறியாமை
2வது 12−#அனுமானம்
3வது 12−#அனுபவம்
4வது 12− #அறிவு
5வது 12−#ஞானம்

2 comments:

  1. நிங்கள் உணர்ந்த விசயம் மற்றவருக்கு உயர்ந்த முயற்சி..... Great ji...

    ReplyDelete
  2. Super..
    http://filminstitutechennai.in

    ReplyDelete