Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Monday, 28 September 2020

ஜீவன் முக்திக்கான ஜாதக அமைப்பு

இப்பிறவியிலேயே பிறப்பறுக்கும் ஜாதக அமைப்பாக லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கேது இருந்தால் முக்தி என ஜோதிடத்தில் கூறுவர். ஆனால், 12ல் கேது இருக்கும் அனைவரும் இப்பிறப்பிலேயே முக்தியடைவர் எனக் கூறமுடியாது. ஆனால், முக்திக்கான தூரத்தை நெருங்கிவிட்டனர் எனலாம். அதாவது, அடுத்த சில பிறப்பிற்கு பிறகு ஜீவன் முக்தியடைய வாய்புண்டு. இருப்பினும், எம்மாதிரியான ஜாகத அமைப்பு இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி என்பதைக் காணலாம்!

1. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் தனது சுய சாரமான அஸ்வினி/மகம்/மூலத்தில் இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

2. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் அவ்வீட்டு அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

3. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் அதிபதியின் சாரத்தில் எங்கிருந்தாலும் இப்பிறவியிலேயே முக்தி (யோகிகள் மற்றும் ஞானிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பைக் காணலாம்)

4. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கர்மக்காரகன் சனியின் சாரமான பூசம்/அனுஷம்/உத்திரட்டாதியில் அல்லது காலனுக்கு 12ம் அதிபதி குருவின் சாரமான புனர்பூசம்/விசாகம்/பூரட்டாதியில் இருந்தால் இப்பிறவியில் முக்தி

5. லக்கினத்தின் மோட்சாதிபதி ஞானக்காரன் கேது அல்லது கர்மக்காரகன் சனியின் சாரத்தில் இருக்க இப்பிறவியிலேயே முக்தி

6. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் குரு அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

7. கால புருஷனுக்கு தர்ம/கர்மாதிபதிகளான குருவும் சனியும் லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே முக்தி

8. ராசியிலும் நவாம்சத்திலும் கேது லக்கினத்திற்கு 12ம் வீட்டில் இருந்து வர்கோத்தமமாக இப்பிறப்பிலேயே முக்தி

9. சனியும் சந்திரனும் சேர்ந்து லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே ஜீவ முக்தியாம்!

இதுபோல இன்னும் பல!!!

#குறிப்பு:  மேற்கண்ட ஜாதக அமைப்பை லக்கினத்திற்கு மட்டுமே பார்க்கவேண்டுமே, தவிர ராசிக்கு பார்க்ககூடாது. ஏனெனில், ராசியான உடல் இறப்புக்கு மட்டுமே விசயம். அதனால், ஜீவன் முக்திக்கு லக்கினத்தை வைத்துதான் கணக்கிட வேண்டும்!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சனியின் சாரத்தில் சூரியன் இருந்தால்

சனியின் நட்சத்திரமான பூசம் / அனுஷம் / உத்திரட்டாதியில் "சூரியன்" இருக்கப் பிறந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதைப் பெற்றிருந்தாலும் இரத்த பந்த உறவுகளின் நயவஞ்சக துரோகம், தாமத திருமணம் அல்லது பற்றற்ற கணவன் / மனைவி, தொடர் உடல் உபாதைகள், ஜென்ம விரோதிகளின் தொல்லை மற்றும் குடும்ப சொத்து, வழக்குகள் மற்றும் அவமானங்கள் போன்றவற்றிலிருந்து ஒருபோதும் விலகி நிற்க இயலாது. இது ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் இருக்கும் பாவகத் தொடர்புகளைப் பொறுத்து அதற்கான பலன்களை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டுமென்பது இப்பிறப்பின் பிராப்த கர்மாவாகும்!!!

பரிகாரங்கள்

1. பேரளம் − திருமீயச்சூர் மேகநாதர் / லலிதாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை தரிஷனம்

2. சென்னை − வியாசர்பாடி / ரவீஸ்வரன் திருகோவிலில் அதிகாலை தரிஷனம்

3. கும்பகோணம் − திருமங்களக்குடி / சிவசூரியனார் திருகோவிலில் அதிகாலை தரிஷனம்

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

குருவின் சாரத்தில் சூரியன்

சமுதாயத்தில் நன்மதிப்பும், அந்நியர்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் குருமாரர்களின் அன்பும் ஆசியும், நல்ல கற்பனைத் திறனும், தெளிவான சிந்தனையும், களிறு போன்ற ஞாபக சக்தியும் உண்டாகும். இது தவிர, வேத சாஸ்திர மந்திரங்களில் ஆர்வமும், சிவ தீட்சையும், வாக்கு பலிதமும், தாமத் திருமணமும், இல்லறத்தில் நல்லறமும், மற்றவர்களை எளிதில் நம்பிவிடும் குணமும் இருக்கும். மேலும், பிராமணர்கள், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு, குறுகிய  ஆன்மீகப் பயணங்கள் மற்றும் உபதேசங்கள் போன்ற தன்மைகள் நிலவும். மேலும், தாய் தந்தையரின் அன்பும் ஆதரவும், தாய்வழி அசையும் / அசையா சொத்துக்கள் கிடைக்கப்பெறும்!!!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

யோகியர் ஜாதகம் (ஜோதிடர்களுக்கான பதிவு)

ஒரு ராசியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் வாழ்வில் பல துயரங்களை அடுக்கடுக்காக சந்திக்க நேரிடும். இவர்களின் வாழ்வாதாரம் மற்றவர்களைப் போன்று சாதாரணமாக அல்லாமல், அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும். இதுதவிர, வாழ்நாளில் ஒருமுறையாவது மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியிருப்பார்கள் அல்லது வாழ்வின் உச்சத்திலிருந்து அடிமட்டத்திற்கு வந்திருப்பார்கள். சிலருக்கு, சகல வசதிகள் இருந்தும் திடீரென நடு வீதிக்கு வரும் நிலைமைகூட ஏற்பட்டுவிடும். சிலரோ, பிறந்ததிலிருந்து கடும் துன்பங்களை மட்டுமே சந்திந்திருப்பார்கள். ஆனால், இத்தனை துன்பங்களையும்,  வலிகளையும் எதிர்கொள்ளும் இவர்கள் யோகியாவர். பெரும்பாலும் யோகிகளுக்கும், ஞானிகளுக்குமே இம்மாதிரியான அமைப்புகள் இருக்கும். அதனால், இவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது மற்ற ஜாதகங்களைப் போல மேலோட்டமான ஜோதிட விதிகளைக் கொண்டு அவசர அவசரமாக பலன்கூறினால் அது முற்றிலும் பொய்த்துவிடும். தவிர, கூட்டு கிரகங்களின் சேர்க்கையை, அவை நின்ற பாவம், ஏறிய சாரம் மற்றும் பாகைகள் முறையே கிரக யுத்தம், அஸ்தங்கம் மற்றும் நவாம்சபாதையில் அக்கிரகங்களின் இருப்பு ஆகியவற்றை மிகவும் நுட்பமாய் ஆய்வு செய்து பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்!!!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

திரிகோணாதிபதிகள் (1,5,9)

ஒரு ஜாதகத்தின் Pilot என்று அழைக்கப்படும் லக்கினாதிபதியும் Co-pilots என்றழைக்கப்படும் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் வலுவாக இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு 1,5,9ம் பாவங்களையும் ஏதாவதொரு விதத்தில் தொடர்புகொண்டு திசை நடத்தினால் அது மிகவும் வலிமையான ஜாதகமாகும். அப்படியான ஜாதக அமைப்புடைய ஜாதகர் வாழ்வில் அனைத்து சுக போகங்களை அனுபவித்து சமுதாயத்தில் பேரும் புகழுடன் திகழ்வார். இதில் 1,5,9 அதிபதிகள் எந்த அளவிற்கு சூட்சும மற்றும் சுபத்துவ வலிமை பெற்று ஒருவரை ஒருவர் தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் பொருத்தே பலன்களும் இருக்கும். இதில் லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது சிறப்பாகும்.

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பாவ புண்ணியம்

முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகள் சஞ்சீத கர்மாவாக நமது முன்னோர்கள் மற்றும் பெற்றோர் வழியாக இப்பிறப்பில் நமக்கு பிராப்த கர்மாவாக வரும். அதில் பாவம் மற்றும் புண்ணியம் என இரண்டுமே அடங்கும். அதில், நாம் என்ன விதமான பாவ / புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பதை நமது லக்கின பாவம் மூலம் அறியலாம். அதாவது, 12 லக்கினங்களும் சில குறிப்பிட பாவங்கள் வழியாக நவக்கிரகங்களின் மூலம் நம் பாவ / புண்ணிய கர்ம வினைகளைக் கடத்தும். உதரணமாக, கீழ்க்கண்ட லக்கினங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பாவங்கள் வழியாகத்தான் பாவ / புண்ணிய கர்மாக்கள் நமக்கு வந்து சேரும். அதாவது, அந்த குறிப்பிட்ட பாவங்களே ராசியாகவோ அல்லது ஆட்சி / உச்ச / நீச கிரகங்கள் இருக்கும் பாவங்களாகவோ அல்லது அப்பாவாதிபதிகள் உச்ச / நீசமாகவோ அல்லது அப்பாவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தோ அல்லது ராகு / கேதுக்கள் இருந்தோ இப்பிறப்பின் பிராப்த கர்மாவைச் செயல்படுத்தும். ஆக, இப்பிறப்பில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அப்பாவங்களின் நன்மை / தீமைகளை சார்ந்தே செயல்படும் என்பது எமது ஜோதிட அனுபவத்தில் யாமறிந்த உண்மையாகும்.

மேஷம் / 2,4,5,7,8,10,11
ரிசபம் / 3,4,5,6,7,9,11,12
மிதுனம் / 4,6,7,10,11
கடகம் / 3,6,9,11,12
சிம்மம் / 1,3,4,9,10
கன்னி / 1,3,7,8,10,11,12
துலாம் / 2,3,6,7,8,11,12
விருச்சிகம் / 2,3,4,5,6,9,11
தணுசு / 2,4,6,7,8,9,11
மகரம் / 2,4,7,8,10,11
கும்பம் / 2,3,9,10,11,12
மீனம் / 1,4,5,7,10,11,12

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

லக்கினம் (உயிர் ஸ்தானம்):

1. கிரேதாயுகத்தில் ஆணும்/பெண்ணும் புணரும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

2. திரேதாயுகத்தில் கரு உண்டாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

3. துவாபரயுகத்தில் சிசுவின் சிரசு ஜனனமாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

4. கலியுகத்தில் ஜனித்த சிசுவின் முதல் சுவாசம் (அழுகை) லக்கினமாக எடுக்கப்படுகிறது

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நாமும் ஜோதிடமும்

ஜோதிடம் என்பது "சார்புடைமை" (relativity). அதாவது, அகத்திற்கும்/புறத்திற்கும் உள்ள தொடர்புதான் ஜோதிடம். இதில் நாம் என்பது தன்னிலை, 1ம் பாவம்; நமக்கு முன்னிலை என்பது 7ம் பாவம். அதாவது, 1 லிருந்து 7 வரை நம்மைச் சார்ந்த விசயங்கள், ஆனால் 7 லிருந்து 12 என்பது நாம் தொடர்புகொள்ளும் விசயங்கள். ஆக ஜோதிடத்தில் 12 பாவங்கள் என்பது அகத்திலும்−புறத்திலும் தொடர்புபட்டு, காலத்தால் #கர்மாக்களாய் பரிணமித்திருக்கிறது. அவை:−

1. சஞ்சிதம்−1,4,7,10 (Past and fixed)
2. பிரார்ப்தம்−2,5,8,11 (Present and practicing)
3. ஆகாமியம்−3,6,9,12 (Future and applicable)

ஜோதிடமானது ஐம்புலனினூடே (கண், காது, முக்கு, வாய், சருமம்) நம்மைத் தொடர்புகொண்டு நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியமாய் இருக்கிறது. இங்கு கிரகங்களாகச் சொல்லப்படும் #ராகு/#கேது என்பவை "நேர்மின் மற்றும் எதிர்மின்" தன்மையுள்ள இருபடி−மூலங்கள். மேலும், #சூரியன்−#சந்திரன் என்பவை ஆத்மா−மனமாய், ராஜா−ராணியாய், சிவம்−சக்தியாய், இடகலை−பிங்கலையாய், புரோட்டான்−எலக்ட்ரானாய் உள்ளும்−புறமும் பிரதானமாக இருந்து, செயல்பட்டு, அதனுடன் கூடிய ஆதார சக்கரங்களாய் குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரனும் இயங்குகின்றன. இவை அனைத்துமே அகத்திலும்−புறத்திலும் இருந்து நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியகங்களாகச் செயல்படுகின்றன.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், உடலில் சுவாசம் என்கிற உயிர்காற்று இருக்கும் வரை ஜோதிடம் என்கிற சார்புடைமை வேலை செய்யும்👍அதாவது, சுவாசம் இருந்தாலே அங்கு ஜோதிடம்தான் (நாடிகளில்−நவகிரகங்களின் நாட்டியம்)  பிரதானமாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்🙏 

ஒருவன் இப்படித்தான் உதாரண புருஷனாய் இருக்க வேண்டும் என்பதற்கு அவனுடை 1,5,9 (லக்கினம்/பூர்வபுண்ணியம்/பாக்கியம்) பாவங்கள் வலுவாக இருக்க வேண்டும், இதற்கு உதாரணம் #ஶ்ரீராமர்; ஆனால் ஒருவன் எப்படி இருக்க கூடாதென்பதற்கு அவனுடைய 3,6,11 ஆகிய பாவங்களின் ஸ்திர தன்மையே காரணமாகும், இதற்கு உதாரணம் #ராவணன்.

இதைத்தான் "ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்" காமம்−குரோதம்−லோபம் (3,6,11) இருப்பவன் தன்னிலை (சத்தியத்தை)  மறந்து, அழிவை சந்திப்பான் எனக்கூறியுள்ளார்🙏

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

மகரம் (பொதுப்பலன்):

1. நீதிதேவனான சனிபகவானின் மகரத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள்

2. காலபுருஷனுக்கு மகரம் கர்ம (ஜீவனம்) ஸ்தானமாக வருவதால் மகரத்தான் கடும் உழைப்பாளிகள், பிறரின் வளர்ச்சிக்கு தன்னை பலிகடாவாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள்

3. பிரகஸ்பதி குரு நீசமாகும் மகரத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் வாழ்வின் ஒரு பகுதியில் ஏமாளிகளாகவும், பிறப்பிலேயே அதீத ஆன்மீக சிந்தனையை அடித்தளமாகவும் கொண்டிருப்பர்

4. செவ்வாய் உச்சமாகும் மகரம் அழுத்தம், பிடிவாதம் போன்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எடுத்த காரியத்தை பின்வாங்காமல் தீவிரமாகச் செய்து முடிக்கும் மனோவேகம் கொண்டது

5. சூரிய/சந்திரர்களின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் (அபிஜித்) கொண்ட மகரத்தான் சொல் மற்றும் செயலில் வசீகரமும், சாஸ்திர வித்தைகளில் சாதுர்யமும், எதிரிகளை எளிதில் வென்று சிம்ம சொப்பனமாய்த் திகழும் பேராற்றலையும் கொண்டவர்கள்

6. ஆரோகண/ஆதாரச்சக்கரத்தில் ஆக்னாவான மகரம் மெய்ஞானத்தின் அடிநாதமாக இருப்பதால் உலகப் புரிதல், இயற்கைப் புரிதல் மற்றும் சகலசம்பத்துகளில் ஞானப் பிளம்பாகும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

கும்பம் (பொதுப்பலன்):

1. பூரிபூரண சாத்வீக ராசியான கும்பத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் தர்க்கம் மற்றும் விவாத விரும்பிகளாக இருப்பினும் நிதானம், பொறுமை மற்றும் தன்னடக்கம் ஆகிய சாத்வீக குணங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

2. காலபுருஷனுக்கு கும்பம் லாபம் மற்றும் பாதகஸ்தானமாக வருவதால் பெரும்பாலும் கும்ப ராசி & லக்கினக்காரர்கள் வாழ்வில் ஏமாற்றம், தொழிலில் கடும் வீழ்ச்சி மற்றும் பல கசப்பான அனுபவங்களைக் கடந்து எதிர் நீச்சல் போட்டு, இறுதியில் சுயமுற்சியால் உச்சநிலைக்கு வருபவர்களாவர்

3. பன்னிரெண்டு ராசிகளிலேயே கும்பம் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த வீடு ஆதலால் இவர்களும் மகரத்தானைப் போன்றே நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, சதா ஆன்மீக சிந்தனைகளைக் கொண்டிருப்பர்

4. பொதுவாக கும்ப ராசி மற்றும் லக்கினக்காரர்கள் எப்போதுமே தங்களை குறைத்தே மதிப்பிடுவர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் அதீத ஆற்றல் சக்தியை அவர்கள் உணர்வதேயில்லை. அப்படியாக உணர்ந்தவர்களில் ஒருவர்தான் கும்பத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்ட அருள்மிகு #ஶ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சர் ஆவார்

5. அதிவீரியக் கிரகங்களான #செவ்வாய் மற்றும் #ராகுவின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்டுள்ளதால் கும்ப ராசி & லக்கினக்காரர்கள் கருநாகத்தின் குணமும், ஆஞ்சனேயரைப் போன்ற வேகமும், மனோ வலிமையும் கொண்டவர்கள். மேலும் இங்கு #குருவின் திரிஜென்ம நட்சத்திரமும் இருப்பதால் இவர்கள் சுவாபத்தில் சுபராவர்

6. அவரோகண/ஆதாரச் சக்கரத்தில் #ஆக்னாவான கும்பம் மெய்ஞானத்தின் உச்சமாக இருப்பதால் இவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஞானோதய விசயங்களோ ஏறாளம், எண்ணிலடங்கா. தவிர, #மெஸ்மரிசம் மற்றும் #வசியம் போன்ற தன்மைகள் இவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டிருக்கும். அதனாலேயே கும்பத்தை சிலர் மாந்தியின் ஆட்சி வீடென்பர்!

மல்லீஸ் குமார்
சென்னை

மீனம் (பொதுப்பலன்):

1. பிரகஸ்பதி குருவின் வீடான மீனத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு, சாஸ்திரத்தில் நாட்டம், சகிப்புத்தன்மை மற்றும் தன்னலமில்லாப் பண்புகளைக் கொண்ட கலியுகத்தின் தங்கமாகிய இவர்கள் "கோபம்" என்னும் ஆயுத்தைப் பிரையோகிக்க ஒருபோதும் விரும்பமாட்டர்

2. காலபுருஷனுக்கு 12ம் வீடாக மீனம் வருவதால் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அயன/சயன போகங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதால், இவர்கள் ஆத்மீக ரீதியான விசயங்களில் மிகவும் தெளிவானவர்கள்

3. களத்திரக்காரன் சுக்கிரன் உச்சமாகும் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அதீத கற்பனைத் திறன், மிகுதியான நகைச்சுவையுணர்வு, அடுத்தவர்களை தம் செயல்பாட்டால் வசீகரிக்கும் தன்மை மற்றும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய குணத்தைக் கொண்டவர்கள் ஆவர்

4. வித்யாக்காரன் புதன் நீசமாகும் மீனத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நிலை தடுமாறினாலும் அதை யாரிடம் கேட்டறிந்தால் தீர்வாகும் என்பதை நன்கு அறிந்தவர்களாவர். அது தவிர இவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்படின் அது அவர்களின் உடல்நிலை வரையிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதாவது அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் கொண்டவர்களாவர்

5. சனி மற்றும் புதனின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்ட மீனத்தான் வயதுக்கு மீறிய விசயங்களை  சாமர்த்தியமாக செய்து முடிக்கும் தன்மை மற்றும் வாழ்வியல் பொருளாதார விசயங்களில் சிக்கனத்தின் சிகரங்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் விசுக்தியான மீனம் வாழ்வில் எவ்விதமான துன்பங்கள் வரினும் அதை தமக்குள்ளே அடக்கி வைத்து, வெளிப்புறத்தில் எப்போதும் ஏகாந்த இன்பநிலையை வெளிப்படுத்தும் தன்மைகொண்டது!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

மேஷம் (பொதுப்பலன்):

1. அங்காரகனாகிய செவ்வாயின் மேஷத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் தைரியம், முரட்டுத்தனம், வீர பராக்கிரம மற்றும் வைக்கிராக்கிய குணங்களைக் கொண்டிருப்பர்

2. காலபுருஷனின் லக்கின பாவமான மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் பிறப்பிலேயே ரோஷக்காரர்கள். தவிர, கடந்தகால நினைவுகளை தொடர்ச்சியாக நிந்திப்பதோடு, எந்நேரமும் விழிப்புடன் செயல்படும் தன்மை கொண்டவர்கள்

3. கர்மக்காரகன் சனி நீசமாகும் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்களின் எண்ணமும், செயலும் பிறழாமல் ஒரே பாதையில் பயணிக்கும் கருமமே கண்ணாயினர். அதாவது, தான் நினைத்த காரியத்தை அதன்படியே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்

4. ஆத்மக்காரகன் சூரியன் உச்சமாகும் மேஷத்தை ராசி மற்றும் லக்கினக்கினமாகக் கொண்டவர்கள் எவருக்கும் அடிபணியாத தன்மைப் பெற்றிருப்பதோடு, மற்றவர்களை தம் அதிகாரத்தால் அடக்கி ஆளும் ஆளுமைக்குணம் கொண்டவர்கள்

5. அஸ்வினி/பரணி/கார்த்திகை ஆகிய பெரும் நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ள மேஷம் பிரபஞ்ச ரகசியத்தின் ஆதிமூலம் ஆகும். எனவேதான் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் தன்னுள்ளே ரகசியங்களைக் கட்டிக்காப்பதில் வல்லவர்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் அநாகதமான மேஷம் அன்பு, பாசம், இரக்கம் மற்றும் விசுவாசம் ஆகிய நற்குணங்களின் இருப்பிடகும். அதனால்தான் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் அன்புக்கு மட்டுமே அடிமைகளாவர்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

காமமும் தட்சிணாயணகால விரதமுறைகளும்

பொதுவாழ்வில் ஆண் / பெண் உணர்வுகளானது குறிப்பிட்ட பருவ காலவங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சாஸ்திர விதிகளுடன் தொடர்புபடுத்தி விளக்க முயல்கிறேன். சாஸ்திரம் வகுத்த நம் முன்னோர்கள் எந்த ஒரு விதியைப் பற்றியும் நேரடியாகச் சொல்லவில்லை. காரணத்தை மறைத்து காரியத்தை மட்டும் செய்யச் சொல்லியிருப்பார்கள். இதை வழுவாமல் இப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் விதிமுறையாய் இருக்கும்.

அதுபோலவே நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பருவகால மாற்றத்தை நம் முன்னோர்கள்  கணக்கிட்டு, அது சார்ந்த வாழ்வாதார முறைகளை சாஸ்திரமாக வகுத்தனர். அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் என்பது சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 தமிழ் மாதங்களைக் குறிப்பனவையாகும். இதன் மொத்தம் 360 பாகைகளை உள்ளடக்கிய ஒரு வட்டமாகும்.

இது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது எனில், சூரியன் ஒரு ராசியல் இருக்கும்போது அதன் எதிர் நிலையான ஏழாம் பாவத்தில் (180 பாகைகள்) சந்திரன் வரும் காலம் பௌர்ணமியாகும். அப்போது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் மீது சந்திரன் வரும்போது முழுமையாகப் பிரகாசிக்கும். 

தமிழ்மாதம் − பௌர்ணமி வரும் நட்சத்திரம்

1. சித்திரை − சித்திரை (சித்ரா பௌர்ணமி)
2. வைகாசி − விசாகம்
3. ஆணி − மூலம்
4. ஆடி − உத்திராடம்
5. ஆவணி − அவிட்டம்
6. புரட்டாசி − உத்திரட்டாதி
7. ஐப்பசி − அஸ்வினி
8. கார்த்திகை − கார்த்திகை (திருக்கார்த்திகை)
9. மார்கழி − திருவாதரை
10. தை − பூசம்
11. மாசி − மகம்
12. பங்குனி − உத்திரம்

மேற்கண்ட நட்சத்திரத்தன்று ஏற்படும் பௌர்ணமி காலத்தில் பூமியில் கிடைக்கும் சக்தியோ ஏறாளம். அத்தகைய அளப்பரிய சக்தியை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க அந்தந்த மாதங்களில் அக்குறிப்பட்ட நட்சத்திரங்களின் பெயரில் விரத முறைகளும், விழாக்களும் எடுக்கப்பட்டது.

இது தவிர மகர ராசியான தை மாதம் முதல், மிதுன ராசியான ஆணி மாதம் வரை "உத்திராயணம்" எனவும், கடக ரிசியான ஆடி மாதம் முதல் தணுசு ரிசியான மார்கழி வரை "தட்சிணாயணம்" எனவும் குறிப்பட்டார்கள். காரணம் உத்திராயண காலத்தில் சூரியன் "வடக்கு" நோக்கியும், தட்சிணாயண காலத்தில் "தெற்கு நோக்கியும்" பயணிக்கும். இதில் விசேஷம் என்னவெனில் சூரியன், தை மாதத்திலிருந்து ஆணி நோக்கி பயணிக்கும் உத்ராயண காலம் "உஷ்ணம்" மிகுந்தும், ஆடியிலிருந்து மார்கழிவரை பயணிக்கும் தட்சிணாண காலம் "குளிர்ச்சி" மிகுந்து காணப்படும். ஏனெனில், உஷ்ண காலங்களில் சூரியன் பூமிக்கு அருகிலும், குளிர்ச்சியான காலங்களில் சூரியன் பூமியைவிட்டு விலகியும் இருக்கும்.

இங்குதான் பதிவின் காமப் பகுதியே ஆரம்பகிறது. இதற்கும் உடலில் உண்டாகும் காம எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என ஐயம் வரலாம். நம் ஆத்மாவானது ஐவகை அக்கினிகளைக் கொண்டெழுப்பும் தன்மை கொண்டது. அந்த ஐவகை அக்கினிகளே நம் உடலின் வெப்பத்தைச் சீராக்கி சமநிலையில் வைக்கிறது. அவை,

ஐவகை அக்கினிகள்:

1. போகாக்கினி (பசியுணர்வு)
2. மோகாக்கினி (மோக உணர்வு)
3. காமாக்கினி (காம உணர்வு)
4. தாபாக்கினி (ஆசையுணர்வு)
5. ஞானாக்கினி (ஞானம்)

ஆன்மாவின் இந்த வெப்பச் சமநிலைக்கும், பூமியில் சூரியனின் பருவகால மாற்றத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்றால், உத்ராயணமான உஷ்ண காலத்தில் நம் உடலின் வெப்பநிலையானது குறைந்தும், தட்சாயிணாயிணமான குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையானது அதிகரித்தும் காணப்படும். அதாவது நம் ஆத்மாவானது புறத்தில் வெப்பம் மிகுதியாக இருக்கும்போது அகத்தில் வெப்பத்தைக் குறைத்தும், புறத்தில் வெப்பம் குறைந்து இருக்கும்போது அகத்தில் வெப்பத்தை அதிகரித்தும் உடலின் வெப்பச் சமநிலையை சீராக்கும்.

விசயம் யாதெனில், எப்போது உடலின்   வெப்பநிலை ஆத்மாவால் கொண்டெழுப்படுகிறதோ அப்போதெல்லாம் உடலின் காம இச்சை அதிகரிக்கும். குறிப்பாக சூரியன் பூமியைவிட்டு 151 பாகை முதல் 270 பாகை வரையிலான தட்சிணாயின காலம் என்பது புரட்டாசி முதல் மார்கழி வரையிலான "குளிர்காலமாகும்". இந்த மாதங்களில் புவியில் ஜனிக்கும் உயிரினங்களுக்கு இப்பெருக்க காலமாகும். அதாவது அந்தக் காலங்களில் அதிகப்படியான காம இச்சைகள் ஆத்மாவால் கொண்டெழுப்பப்படும்.

குறிப்பிட்டுள்ள நட்சத்திர காலங்களில் ஏற்படும் பௌர்ணமி ஒளியால் பூமியில் அளப்பரிய சக்தி உண்டாக்கும் என மேலே குறிப்பிட்டிருக்கிறேன். அச்சக்தியானது நம் உடலின் வெப்ப சக்தியோடு சேரும்போது உடலானது புத்துணர்ச்சியால் கிளர்ச்சியடைந்து வரைமுறையற்ற காமத்தை வெளிப்படுத்தும். அதானாலேயே, புரட்டாசி முதல் மார்கழி வரையிலான குளிர்காலத்தில் அதிகப்படியான விரத முறைகளும், விழாக்களும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்படுகிறது. அதாவது #புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் மற்றும் நவராத்திரி / விஜயதசமி நோன்பு, #ஐப்பசியில் தீபாவளிப்பண்டிகை, #கார்த்திகையில் முருகனுக்கு திருக்கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலையணியதலும், #மார்கழியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை நோன்பும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்பட்டு காம உணர்வுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதுவே நம் முன்னோர்கள் வகுத்த அதிவிஞ்ஞான சாஸ்திரமாகும்.

மேலும் புரட்டாசியானது / ஆண்களுக்கும் மார்கழியானது / பெண்களுக்கும் உரித்தான காலமாகும். அதாவது புரட்டாசியில் ஆணின் உணர்வுகள் வக்கிரமாகவும், மார்கழியில் பெண்ணின் உணர்வுகள் வக்கிரமாகவும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் இருவரின் உணர்வுகள் சமநிலையிலும் இருக்கும். அதனாலேயே புரட்டாசி மாதம் ஆண்களின் விரத காலமாகவும்,  மார்கழிமாதம் பெண்களுக்கு திருப்பாவை நோன்பு காலமாகவும் பிரிக்கப்பட்டது. இவ்விரண்டு மாதங்களிலும் களத்திரக் (திருமண) காரகரான பெருமாளே பிரதானக் கடவுளாகும், நன்றி!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

எட்டில் சனி பகவான்

ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி இருப்பவர்கள் தினம் தினம் போராடி ஜெயிக்க வேண்டும். வாழ்வில் பலவிதமான சோதனைகளைக் கடந்து எதிர் நீச்சல் போட வேண்டும். அதிலும் சனி திசை அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்ம சனி தொடர்புண்டானால் தீராத நோய், தொடர் மனக்கவலைகள், விரக்தி, காரணமில்லா பயம், தற்கொலை எண்ணம் போன்றவை தலை தூக்கும்!

பரிகாரம்:

1. நெல்லிக்காய் சாறு குடித்தல், பூமிக்கு கீழ் விளையும் உணவுப் பொருட்களை உண்ணுதல்

2. ஶ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெருமாள் ஸ்தலங்கள், ஐயப்பன் கோவில் வழிபாடு மற்றும் முருகனின் அறுபடை வீடுகள் வழிபாடு, அதில் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் சன்னதி வழிபாடு நன்மை தரும்.

3. காலபைரவ மற்றும் துர்க்கை வழிபாடு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை